» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உலகளவில் 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது: சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
புதன் 19, பிப்ரவரி 2025 4:45:45 PM (IST)

தமிழ்மொழி உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா போன்ற 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது என சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் நேரு செவிலியர் கல்லூரியில் இன்று (19.02.2025) நடைபெற்ற தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டியினை (2025) தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசுகையில் "தமிழ்நாடு முதலமைச்சர், சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இனஉரிமை, மாநில சுயாட்சி, ஆகிய தத்துவங்களின் அடிப்படையில்தான் தமிழ்நாடு பயணிக்க வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது சமூகத்தின் வளர்ச்சியாக, வாழ்க்கை வளர்ச்சியாக, சிந்தனை வளர்ச்சியாக, பண்பாட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் நான் கனவு காணும் வளர்ச்சி அதற்கு உங்கள் வழிகாட்டுதல்கள் தேவை என்று கூறியுள்ளார்கள்.
அதன்படி நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் கல்வியில் தலை சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பெண் கல்வி, உயர்கல்வியில் இந்தியாவிலே தமிழ்நாடு தான் தலைசிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மாணவ மாணவியர்கள் பேச்சுப்போட்டியில் அனைவரும் கலந்து கொண்டு தனது பேச்சு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று பேச்சுப்போட்டியினை தொடங்கி வைப்பதில் பெரு மகழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்மொழி உலக அளவில் புகழ் பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், கனடா போன்ற 7 நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக உள்ளது. உலகத்தில் மூன்று மொழிகளில் தமிழ் மொழி முதன்மை மொழியாக உள்ளது. பிஷப் கால்டுவெல் 18 மொழியை கற்று தெரிந்தவர் உலகத்தில் தலை சிறந்த மொழி தமிழ்மொழி என்று எடுத்துரைத்தார்கள். அவர் தமிழுக்கு ஒப்பிலக்கணம் தந்தவர். அதனால்தான் பிஷப் கால்டுவெல் தமிழறிஞர் பிஷப் கால்டுவெல் என்று போற்றப்பட்டார். பிஷப் கால்டுவெல் நினைவினை போற்றும் விதமாக அவர் வாழ்ந்து மறைந்த இடையன்குடியில் பிஷப் கால்டுவெல் இல்லம் அரசு இல்லமாக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.
நம்முடைய மறைந்த தலைவர்களான பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சிமொழி எங்கள் தமிழ்மொழி தான் என்றும், அதற்கு அடுத்தப்படியாக இரண்டாம் மொழியாக ஆங்கிலம்; என்பதால் ஆங்கிலம் கற்று தமிழ் வழியில் கல்வி படித்தவர்கள் விண்வெளி ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும், அயல்நாட்டில் பல்வேறு உயர் பதவிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். என்பது மிகப்பெருமைக்குரிய செயலாகும்.
இன்று நடைபெறும் தமிழ் போட்டிக்கான தலைப்புகள் ஒன்றே குலம், ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும் மதவெறி நீங்கட்டும், மக்களாட்சியின் மாண்பும் மதச்சார்பற்ற அரசும், ஏன் வேண்டும் இடஒதுக்கீடு, இந்திய சமூக நீதி வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்கு, சதிக்கு கால் முளைத்து சாதியானது, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமகால ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள், விடுதலைப்போரில் தமிழர்களின் பங்கு, தமிழர்களாய் உயர்வோம், தலை நிமிர்ந்து நிற்போம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களில் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கனை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசெல்வி, டி.டி.என் கல்வி குழுமம் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ்;, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், பாஸ்கர், முக்கிய பிரமுகர் ஜோசப் பெல்சி உட்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
