» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலை முயற்சி : போலீஸ் விசாரணை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 7:09:14 PM (IST)
நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை அருகே கடம்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன்(33). இவர் இளநீர் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஆர்த்திகா(8), ரித்திகா(6), முத்து நிவிஷா (3), வைதீகா(1) என 4 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், ராஜேஷ் கண்ணன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராஜேஷ் கண்ணன், தானும் விஷம் குடித்து மயங்கினார். உடனே உறவினர்கள் அவர்கள் 6 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜேஷ் கண்ணனுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக அந்த பெண்ணுடன் அவர் நெருங்கி பழகிய நிலையில், அவரை 2-வதாக திருமணம் செய்யப்போவதாக தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
இதனை அவர் கண்டித்து பார்த்தும், அவர் கேட்கவில்லை. நேற்று இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்படவே, மன விரக்தி அடைந்த புவனேஸ்வரி இனி இந்த உலகில் நாம் வாழ வேண்டாம், நமது குழந்தைகளும் வாழ வேண்டாம் என எண்ணி குழந்தைகளுக்கு அவர் அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.
அந்த அதிர்ச்சியில் மனைவி, குழந்தைகள் இல்லை. நாம் ஏன் இந்த உலகத்தில் வாழ வேண்டும் என எண்ணி பூச்சிக்கொல்லி மருந்தை ராஜேஷ் கண்ணன் குடித்தது தெரியவந்தது. தற்போது 4 குழந்தைகளின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கணவன்-மனைவி 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளதால் அவர்களது உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)
