» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து அவதூறு: நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார்!

திங்கள் 21, ஏப்ரல் 2025 11:50:12 AM (IST)

நடிகர் நெப்போலியன் மகனின் உடல் நிலை குறித்து அவதூறு பரப்பப்படுவதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

1991ல் பாரதிராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நெப்போலியன். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் இவர், தி.மு.க.வில் இணைந்து தேர்தலில் நின்று வெற்றிப்பெற்று எம்பியாக ஜொலித்தார். ஆனால், திடீரென்று, தனது குடும்ப நலனுக்காக அனைத்தையும் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்று செட்டிலாகி விட்டார்.

இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், குணால், தனுஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். இதில் தனுஷுக்கு நான்கு வயதாகும்போது தசை சிதைவு நோய் தாக்கியது. இதற்காக சிகிச்சை பெற்று தனுஷ் ஓரளவு குணமடைந்தார். இதற்கிடையில், திருநெல்வேலியை அடுத்து மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்சயாவுக்கும், தனுஷுக்கும் ஜப்பானில் சமீபத்தில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், தனுஷ் உடல் நிலை குறித்தும், அக்சயா குறித்தும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாக நடிகர் நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில், "தனுஷ் மற்றும் அக்சயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்து வரும் நிலையில், அவர்கள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory