» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்புக்கூட்டம்!

செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:17:05 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (22.04.2025) நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் (DISHA COMMITTEE) மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 34 வகையிலான பல்வேறு திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), உயிர்நீர் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்), பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சமுதாய முதலீட்டு நிதி, வங்கி கடன் இணைப்பு,  உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் செயல்படுத்திவரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என குழுவின் தலைவர் மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory