» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டம் : பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடங்கியது

புதன் 23, ஏப்ரல் 2025 4:39:07 PM (IST)



நெல்லையில் ஆசிரியர்கள் போராட்டத்தால் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள்திருத்தும் பணி முடங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி, சேரன்மகாதேவி, வள்ளியூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் வி.எம்.சத்திரத்தில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நான்குனேரி ஜோசப் பள்ளி ஆகிய மையங்களில் திருத்தப்படுகின்றன. 

விடைத்தாள் திருத்தும் பணியில் சுமாா் 2 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். கடந்த நான்காம் தேதி தொடங்கிய இந்த பணி 20 நாள்கள் நடைபெறும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், மாநகரப் பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டுபடி என சொல்லப்படும் நாளொன்று கொடுக்கப்படும் ரூ.200 கொடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவா்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory