» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உதவியாளர் - டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:27:53 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உதவியாளர் உடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு (Assistant Cum Data Entry Operator) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடமானது ஒரு வருட ஒப்பந்த அடிப்டையில் தட்டச்சு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிபணியிடம்: 1 (ஒன்று). கல்வித் தகுதிகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி, கணினி படிப்பில் டிப்ளமோ / சான்று பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மாதம் ரூ.13240/- மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை.
இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tirunelveli.nic.in என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கான படிவத்தினை பூர்த்தி செய்து 06.05.2025 அன்றுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம். குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி -9 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும், கூடுதல் விபரங்களை 0462-2901953 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)

நாங்குநேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 26, ஏப்ரல் 2025 3:26:36 PM (IST)

தடைசெய்யப்பட்ட மையோனைஸ் பயன்படுத்தும் உணவு வியாபாரிகள் மீது நடவடிக்கை: அரசு உத்தரவு!
சனி 26, ஏப்ரல் 2025 12:04:15 PM (IST)
