» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
செல்போன் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஞாயிறு 18, மே 2025 9:07:08 PM (IST)
நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன் (23) கடந்த 18.4.2025 அன்று பாளையங்கோட்டை மார்க்கெட்ரோடு, வண்டிபேட்டை அருகே பாளையங்கோட்டை, கோட்டூர்ரோடு, முப்பிடாதி அம்மன் கோவில் மேலத் தெருவில் வசிக்கும் பிச்சையா மகன் அருண்பாபு என்பவரிடமிருந்து கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த சங்கரநாராயணன், திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், போலீஸ் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இன்று (18.5.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு
புதன் 21, மே 2025 5:44:10 PM (IST)

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 21, மே 2025 4:05:17 PM (IST)

அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது!
புதன் 21, மே 2025 12:52:59 PM (IST)

உயர்கல்வியினை ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுரை
செவ்வாய் 20, மே 2025 12:03:14 PM (IST)

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
செவ்வாய் 20, மே 2025 10:53:26 AM (IST)

விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்: கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!!
திங்கள் 19, மே 2025 9:24:45 PM (IST)
