» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது!

புதன் 21, மே 2025 12:52:59 PM (IST)

தென்காசியில் அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பட்டமுடையார்புரம் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்துரை (43). இவர் பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேச்சியம்மாள் என்ற உமா (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வேல்துரை தனது மனைவி, குழந்தைகளுடன் அடைக்கலப்பட்டணத்தில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

வேல்துரை தினமும் தனது மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்திற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பணிக்கு பஸ்சில் சென்றுவந்தார். நேற்று முன்தினம் அதிகாலையில் பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது வேகமாக வந்த ஒரு கார் மோதியதில் வேல்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, காரை ஓட்டிவந்தது பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (36) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் திடீர் திருப்பமாக இது விபத்து இல்லை. திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது.

அதுபற்றிய விவரம் வருமாறு: வேல்துரை தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் முத்து சேர்மன் என்ற சுதாகர் (41). இவருக்கும், பேச்சியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும், வேல்துரை பணிக்கு சென்ற பின்னர் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அறிந்த வேல்துரை 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர், பேச்சியம்மாள் ஆகியோர் வேல்துரையை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுதாகர் தனது நண்பரான கார் டிரைவர் ஆறுமுகம் உதவியுடன் வேல்துரையை காரை ஏற்றி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி சுதாகர், பேச்சியம்மாள், ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory