» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆய்வு
புதன் 21, மே 2025 5:44:10 PM (IST)

இராதாபுரம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியார் ஆய்வு மேற்கொண்டனர்.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டத்திலும் முதற்கட்ட சுற்று நிறைவு பெற்று, இரண்டாம் சுற்றாக மானூர், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, திசையன்விளை, நாங்குநேரி ஆகிய வட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு இன்றையதினம் ஆறாம் வட்டமாக இராதாபுரம் வட்டத்திற்குட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இராதாபுரம் வட்டம், வள்ளியூர், நாங்குநேரி, இராதாபுரம், காவல்கிணறு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவ வசதி மேற்கொள்வதற்காக 200 படுக்கை வசதிகளுடன் கொண்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், அனைத்து வசதிகளுடன் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் , மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துமனையின் கட்டுமானப் பணிகளை அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுப்பணித்துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
தொடர்ந்து, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குவதற்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் இராதாபுரம் வட்டம் வள்ளியூர் பகுதியில் ரூ.63.45 கோடி மதிப்பீட்டில் 504 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடங்களின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைந்து முடித்திடவும், பயனாளிகளுக்கு பங்களிப்பு தொகை வங்கிகள் மூலம் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும், ரூ.12.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டதோடு, ரூ.6.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வள்ளியூர் கலைஞர் நூற்றாண்டு நினைவு தினசரி சந்தையினையும் பார்வையிட்டு ஒரு மாதக்காலத்திற்குள் சந்தை பணிகளை விரைந்து முடித்திடுமாறும், பேரூராட்சி அலுவலர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் , மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் அறிவுறுத்தினார்கள்.
ரூ.59.38 கோடி மதிப்பில் பணக்குடியில் கட்டப்பட்டு வரும் 462 குடியிருப்பு பணிகளையும், ரூ.423.13 கோடி மதிப்பீட்டில் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 24 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 720 கி.மீ நீளம் பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணகுடி பகுதி 1 தர்மபுரம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து, காவல்கிணறு பகுதியிலுள்ள மலர் வணிக வளாகம் பணிகள் புனரமைப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும், இராதாபுரம் வட்டம் கூட்டப்புளியில் தூண்டில் வளைவு அமைப்பதின் மூலம் கடல் அரிப்பு முற்றிலுமாக தடுக்கப்படுவதால், மீனவர்களின் நலன் கருதி ரூ.48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்கும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
மேலும், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டது தொடர்பாக இராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் இராதாபுரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து, இராதாபுரம் வட்டத்தில் ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதோடு, நாளையும் (22.05.2025) பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன் அவரக்ள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) லதா, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) மாடசாமி, உதவி நிர்வாக பொறியாளர் ஏழில், ரீத்தா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கண்காணிப்பு பொறியாளர் கென்னடி, செயற்பொறியாளர் தீனதயாள் மோசஸ், வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
புதன் 21, மே 2025 4:05:17 PM (IST)

அரசு பஸ் கண்டக்டர் கார் ஏற்றி படுகொலை : மனைவி, கள்ளக்காதலன் உட்பட 3பேர் கைது!
புதன் 21, மே 2025 12:52:59 PM (IST)

உயர்கல்வியினை ஆலோசித்து தேர்வு செய்ய வேண்டும்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவுரை
செவ்வாய் 20, மே 2025 12:03:14 PM (IST)

அம்பையில் பொதுமக்களை அச்சுறுத்திய கரடி பிடிபட்டது...!
செவ்வாய் 20, மே 2025 10:53:26 AM (IST)

விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் நல்லடக்கம்: கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி!!
திங்கள் 19, மே 2025 9:24:45 PM (IST)

திருநெல்வேலியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
திங்கள் 19, மே 2025 3:24:44 PM (IST)
