» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தனியார் நிதி நிறுவனம் ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
வெள்ளி 28, மார்ச் 2025 5:26:39 PM (IST)
தனியார் நிதி நிறுவனம், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் கடன் நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சார்ந்த ஜெயக்குமார் என்பவர் சென்னையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியுள்ளார். கடன் வாங்கும் பொழுது ஒரு லைப் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தியுள்ளார். ஆனால் தனியார் நிதி நிறுவனம் பாலிசி வழங்காமல் இருந்துள்ளனர். அதன் பின்னர் உடல் நலம் சரியில்லாமல் ஜெயக்குமார் இறந்து விட்டார்.
இதற்காக மாவட்ட காவல் துறையிடம் ஜெயக்குமார் மனைவி சுதா புகார் மனு கொடுத்துள்ளார். உரிய காப்பீடு செய்திருந்தால் புகார்தாரரின் கடன் தொகை முழுவதும் சரி செய்யப்பட்டிருக்கும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர் ஆகியோர் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை தனியார் நிதி நிறுவனம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ரூபாய் 1,00,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆகியவற்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால்; அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த காட்சிகள் நீக்கம் : முதல்வர் ஸ்டாலின் தகவல்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 5:37:26 PM (IST)

தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:59:06 PM (IST)

தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை அறிவிப்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:55:48 PM (IST)

இந்து கோயில்களின் சொத்துகளை சுரண்டுகின்ற கொள்ளைக்கார கூட்டம் திமுக: ஹெச்.ராஜா ஆவேசம்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:54:10 PM (IST)

மாணவர்கள் ஆதார் வைத்துள்ளார்களா என ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:41:07 PM (IST)

வக்பு சட்டத்திருத்த மசோதா காலத்தின் கட்டாயம் : நடிகர் சரத்குமார் வரவேற்பு
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:25:08 PM (IST)
