» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை
ஞாயிறு 1, ஜூன் 2025 3:47:38 PM (IST)

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் இயற்கை வளம் சிறக்க கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் அருளாசியுடன் கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கல்வி வளம் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வளம்பெறவும், தொழில்வளம் சிறக்கவும், கொரானா கொடிய நோய் மீண்டும் பரவாமல் தடுக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி. ஆர்.முருகன் வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.
சக்தி கொடியை மன்ற தலைவர் அப்பாசாமி ஏற்றிவைத்தார். தொடர்ந்து அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. தொடர்ந்து 54 ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவியாக சேலைகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தளவாய்புரம் ஆதிபராசக்தி மன்ற தலைவர் ராஜ் தொடங்கி வைத்தார்.

விழாவில் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டி. உமா, மாவட்ட தகவல் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத், இந்திரா நகர் மன்றம் அழகு மாணிக்கம், மந்திதோப்பு பண்டார முருகன், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், மன்ற பொறுப்பாளர்கள் கற்பகவள்ளி, ராதா, விஸ்வநாத், இராஜலெட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி: நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை
செவ்வாய் 3, ஜூன் 2025 12:40:15 PM (IST)

ரயில் படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் : ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண் கைது
செவ்வாய் 3, ஜூன் 2025 12:32:22 PM (IST)

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா: ஆளுநர் ஒப்புதல்!
செவ்வாய் 3, ஜூன் 2025 11:53:35 AM (IST)

கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
செவ்வாய் 3, ஜூன் 2025 10:30:11 AM (IST)

சார் என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியது ஏன்? நீதிபதியின் தீர்ப்பில் விளக்கம்!
செவ்வாய் 3, ஜூன் 2025 10:18:31 AM (IST)

பள்ளிகளில் காலை உணவுத்திட்ட செயல்பாடுகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:08:56 AM (IST)
