» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்

வியாழன் 26, ஜூன் 2025 12:42:54 PM (IST)

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள முதல்-அமைச்சர், நேற்று மாலை கல்லணையை திறந்து வைத்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூரில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காட்பாடிக்கு ரெயிலில் வந்திறங்கியதில் இருந்து மக்களின் வரவேற்பில் மனம் நிறைந்துவிட்டது. 

வேலூரில் 5 மணிக்கு தொடங்கி, திருப்பத்தூருக்கு 11 மணிக்கு வந்து சேர்ந்தோம். திமுக தொண்டர்கள் வரவேற்போடு, பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என பல தரப்பினரும் வரவேற்பு அளித்தனர். 2026 மட்டுமல்ல, 2031, 2036 என எப்போது இருந்தாலும் நாம்தான் என்பதை வரவேற்பு காட்டியிருக்கிறது. பொறுப்பில் உள்ள துறை மட்டுமல்ல, மாவட்டத்தையும் சிறப்பாக வளர்த்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.

தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் கூட தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் உடன் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு புதிய உச்சம் பெற்றுள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது. நாட்டின் மொத்த வளர்ச்சியில் சுமார் 10 சதவீதம் பங்களிப்பு தமிழ்நாடு உடையது. தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக உருவாகி வருகிறது தமிழ்நாடு.

பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்று உள்ளது. ஒரு வீடு கட்ட ரூ.1.20 லட்சம் தராங்க. இந்த காசுல வீடு கட்ட முடியுமா? அதுலயும் ரூ.72,000 மட்டும்தான் மத்திய அரசு தருது. மீதி கூடுதலாக ரூ.1.62 லட்சம் மாநில அரசு கொடுத்து வீடு கட்டித் தருகிறோம். பெயர்தான் அவங்களோடது. நிதி நம்முடையது. அதனாலதான் ஏற்கனவே நான் ஒரு டயலாக் சொன்னேன். மாப்பிள்ளை அவருதான். ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory