» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் தகவல்!

சனி 26, ஜூலை 2025 8:52:21 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27% அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 103 வருடங்களாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வங்கியானது 585 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5.3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

தூத்துக்குடியில் நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் 2025-26 முதலாம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  சலீ எஸ் நாயர் தணிக்கை செய்யப்படாத முதலாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். 

பின்னர் அவர் கூறியதாவது : 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச காலாண்டு நிகர லாபத்தை நாங்கள் அடைந்துள்ளோம், இது எங்களது கடன் மற்றும் வைப்பு வணிகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியால் கிளைகளை விரிவுபடுத்துவதிலும், அடையப்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 

இந்த காலாண்டில், முக்கிய நகரங்களில் 7 புதிய கிளைகளை திறந்து, எங்கள் விநியோக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். வங்கியின் டிஜிட்டல் மாற்றத்திற்காகவும், வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்த செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்காகவும் பல திட்டமுறை கூட்டாண்மைகளில் நாங்கள் நுழைந்துள்ளோம்., இது வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. 

இவை போன்ற நடவடிக்கைகள், பொறுப்பான கடன் வழங்கல் மற்றும் முறையான risk management செயல்பாடுகளில் நமது கவனம் ஆகியவை, எதிர்காலங்களில் நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சிக்கான பாதையை அமைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து அடிப்படை அளவீடுகளிலும் வங்கி தொடர்ந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நிர்வாக துணைத் தலைவர், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கு கொண்டனர்.

வங்கி வளர்ச்சியின் சிறப்பம்சங்கள்

நிகர லாபம் 6.27% அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வராக்கடன் 1.44% இலிருந்து 1.22% ஆகக் குறைந்துள்ளது. 22 bps மேம்படுத்தப்பட்டுள்ளது. நிகர வராக்கடன் 0.65% இலிருந்து 0.33% ஆகக் குறைந்துள்ளது, 32 bps மேம்படுத்தப்பட்டுள்ளது.  PCR 90.27% இலிருந்து 94.32% ஆக அதிகரித்துள்ளது

மொத்த கடன் தொகையில் SMA ஆனது 4.98% இலிருந்து 3.05% ஆக குறைந்துள்ளது, 193 bps குறைந்துள்ளது CRAR % 29.21% மேம்படுத்தப்பட்டுள்ளது.  பங்கின் புத்தக மதிப்பு ரூ.520.63 இல் இருந்து ரூ.589.09 ஆக அதிகரித்துள்ளது. மொத்த வணிக வளர்ச்சி 9.86% ஐ கடந்தது. வைப்புத் தொகை ரூ.49,188 கோடியில் இருந்து ரூ.53,803 கோடியாக உயர்ந்துள்ளது.

கடன் தொகை ரூ.45,120 கோடியாக உயர்ந்துள்ளது. YoY அடிப்படையில் இது 10.44% வளர்ச்சியை எட்டியுள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.580 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.567 கோடியாக இருந்தது.) இது 2.29% வளர்ச்சியாகும். நிகரமதிப்பு (Networth) ரூ.9,328 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் முதலாம் காலாண்டில் ரூ.8,244 கோடியாக இருந்தது) இது ரூ.1084 கோடி உயர்ந்து 13.15 % வளர்ச்சி அடைந்துள்ளது.

RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) 92.07% யிலிருந்து 93.31%யாக உயர்ந்துள்ளது. வங்கியானது இந்த காலாண்டில் 7 புதிய கிளைகளை துவக்கியுள்ளது. வங்கி சமீபத்தில் மூன்று முக்கிய முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது சேவை வழங்கல்களை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.

Oracle CX அமல்படுத்தல்: வாடிக்கையாளர் வாழ்க்கைச் சுழற்சி மேலாண்மையை எளிமைப்படுத்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி  ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை தளமான Oracle CX-ஐ செயல்படுத்தியுள்ளது. நேரடி செயலாக்க முறையின் (Straight-Through Processing STP) பயன்பாட்டின் மூலம் சேவை கோரிக்கைகளுக்கான பதிலளிப்பு நேரம் விரைவுபடுத்தப்பட்டு, பல வாடிக்கையாளர் தொடு நிலையங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Vendor Management System (VMS): மனிதவளச் செயல்பாடுகளை தவிர்த்து, வங்கி முழுவதுமாக செலவுக் கட்டுப்பாட்டிற்காக ஒருங்கிணைக்கப்பட்ட விற்பனையாளர் மேலாண்மை முறைமை (VMS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைமை மூலம் ஜிஎஸ்டி, நிறுவன வரி மற்றும் வருவாய் கடமைகள் உள்ளிட்ட வரி இணக்கம் துல்லியமாகவும் திறமையாகவும் பராமரிக்கப்படும்.

Business Process Management (BPM): முழுமையாக டிஜிட்டல் மற்றும் செயல்முறை சார்ந்த வங்கியாக மாறும் நோக்கத்தில், TMB ஒரு முக்கியமான முன்னேற்றமாக வணிக செயல்முறை மேலாண்மையை (BPM) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி முழுமையான டிஜிட்டல் வேலை நடத்தல்களை செயல்படுத்துவதன் மூலம் செயல்திறனை அதிகரிக்கவும், காகித அடிப்படையிலான செயல்பாடுகளை குறைக்கவும் நோக்கம் கொள்கிறது.  வங்கி, அதன் பங்குதாரர்களுக்கு உயர் மதிப்பை வழங்கும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory