» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
சனி 26, ஜூலை 2025 4:43:27 PM (IST)

புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு புவிசார் குறியீடு பெற்ற தோவாளை மாணிக்கமாலை தொடுத்தல் சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா இன்று துவக்கி வைத்தார்
பின்னர் அவர், தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயார் செய்யப்படும் மாணிக்கமாலையானது புவிசார் குறியீடு (Geographical Index) பெற்றுள்ளது, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், சுசிந்தரம் தாணுமாலையான் கோவில் மற்றும் பல சிறப்பு மிக்க கோவில்களிலும், திருமணம், வரவேற்பு, போன்றவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தோவாளையில் பெரிய அளவில் நடைபெற்று வரும் மலர் சந்தைக்கு வரும் பூக்களால், பூ கட்டுதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது மாவட்ட திறன் மேம்பாட்டு கழகத்தின், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், மாணிக்கமாலை தொடுத்தல் பயிற்சியானது மாற்றுத்திறனாளிகள்/ மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் ஆகிய 30 நபர்கள் அடங்கிய குழுவிற்கு மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குநர் லெட்சுமி காந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், உதவி திட்ட இயக்குநர் வளர்மதி, முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், முன்னாள் தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஆக.1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 26, ஜூலை 2025 4:33:50 PM (IST)

நடிகை இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: திலீப் சுப்பராயன் விளக்கம்
சனி 26, ஜூலை 2025 4:00:13 PM (IST)

பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்!
சனி 26, ஜூலை 2025 3:41:39 PM (IST)

குமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
சனி 26, ஜூலை 2025 3:30:59 PM (IST)

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!
சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)

அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2பேர் பாயம்!
சனி 26, ஜூலை 2025 11:49:21 AM (IST)
