» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? - அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்!!

சனி 26, ஜூலை 2025 11:06:22 AM (IST)

நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளியிட்ட பதிவில், நாமக்​கல் விசைத்​தறி தொழிலா​ளர்​களுக்கு நடந்​தது ‘கிட்னி திருட்டு இல்​லை, முறை​கேடு’ என தமிழக சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சொல்​கிறார்.

ஒரு​வரின் ஏழ்​மை​யைப் பயன்​படுத்தி அவரின் உடல் உறுப்​பு​களை திருடு​வதை முறை​கேடு என்று சொல்​வ​தா? இந்த விவ​காரத்​தில் இடைத்​தரக​ராக செயல்​பட்ட திமுக நிர்​வாகி திரா​விட ஆனந்​தன் இன்​று​வரை கைது செய்​யப்​ப​டா​மல் இருப்​பது ஏன், கிட்னி திருட்டில் தொடர்​புடைய திமுக​வின் மண்​ணச்​சநல்​லூர் சட்​டப்​பேரவை உறுப்​பினர் நடத்​தும் மருத்​து​வ​மனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்​து​விட்​டால் போது​மா? இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory