» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகை இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: திலீப் சுப்பராயன் விளக்கம்
சனி 26, ஜூலை 2025 4:00:13 PM (IST)
இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விளக்கம் அளித்துள்ளார்.

இன்ஸ்டா ஸ்டோரியில் இலக்கியா பதிவிட்டுள்ளதாவது : "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான்" என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலானது.
தமிழ் திரையுலகில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர் சூப்பர் சுப்பராயன். இவரின் மகனான திலீப் சுப்பராயனும் தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர் சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஜில்லா, புலி, தெறி, வாரிசு, கோட், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, காப்பான், தீரன், வட சென்னை போன்ற வெற்றிப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
யூடியூபர், இன்ஸ்டா பிரபலமான இலக்கியா நேற்று தற்கொலை முயற்சி செய்துள்ளார், அதிக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இலக்கியா ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது குற்றம் சாட்டியுள்ளார். சில மணி நேரத்தில் தனது குற்றச்சாட்டு பதிவுகளை நீக்கிவிட்டு, 'ஆல் ஆர் பேக் நியூஸ்' என்று மாற்றியுள்ளார் இலக்கியா.
இந்நிலையில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள திலிப் சுப்பராயன், தனது பெயரை குறிப்பிட்டு இலக்கியா பகிர்ந்திருந்தது பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக இதை யாரோ செய்கிறார்கள். இந்த விவகாரத்தை நான் சட்டப்படி சந்திப்பேன். இலக்கியா தற்கொலை முடிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட நபரே அப்பதிவை அழித்துவிட்டு, பொய்ச்செய்தி என விளக்கம் அளித்துள்ளதாகவும் திலீப் சுப்பராயன் சுட்டிக்காட்டியுள்ளார். தன்னைக் குறித்து பொய்யான தகவல் பரவி வருவதாக கூறியுள்ள அவர், இதனால் தானும் தனது குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
சனி 26, ஜூலை 2025 4:43:27 PM (IST)

தமிழகத்தில் ஆக.1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 26, ஜூலை 2025 4:33:50 PM (IST)

பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்!
சனி 26, ஜூலை 2025 3:41:39 PM (IST)

குமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
சனி 26, ஜூலை 2025 3:30:59 PM (IST)

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!
சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)

அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2பேர் பாயம்!
சனி 26, ஜூலை 2025 11:49:21 AM (IST)
