» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரதமரிடம் தமிழக அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்!
சனி 26, ஜூலை 2025 3:41:39 PM (IST)

தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், பணிகள் குறித்து மாநில அரசின் சார்பில் மனு அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த மனு பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது.
இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்திட, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26.7.2025) தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார்.
இந்த மனுவினை தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் அளிக்க உள்ளார். இந்நிகழ்வின்போது, மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் உடனிருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் இந்த மனுவை வழங்குவார்’ எனத் தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: ஆட்சியர் துவக்கி வைத்தார்
சனி 26, ஜூலை 2025 4:43:27 PM (IST)

தமிழகத்தில் ஆக.1ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
சனி 26, ஜூலை 2025 4:33:50 PM (IST)

நடிகை இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: திலீப் சுப்பராயன் விளக்கம்
சனி 26, ஜூலை 2025 4:00:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
சனி 26, ஜூலை 2025 3:30:59 PM (IST)

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!
சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)

அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2பேர் பாயம்!
சனி 26, ஜூலை 2025 11:49:21 AM (IST)
