» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2பேர் பாயம்!

சனி 26, ஜூலை 2025 11:49:21 AM (IST)

கன்னியாகுமரி அருகே அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2பேர் இறந்தனர். மேலும் 2பேர் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அப்சல் (17), அஜ்மல் (16), நாசில் (15), அஜித் (17). இதில் அஜ்மல் பிளஸ் 2, நாசில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர். இதனிடையே, குழித்துறையில் நடைபெற்று வரும் வாவுபலி பொருட்காட்சியை பார்க்க நேற்று மாலை நண்பர்கள் 4 பேரும் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை அப்சல் ஓட்டிச்சென்றார்.

மார்த்தாண்டம் அருகே கல்லுத்தொட்டி பகுதியை சென்றடைந்த போது சாலையில் எதிரே வந்த அரசு பஸ்சும், பைக் நேருக்கு நேர் மோதின. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த 4 பேருக்கும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து, படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அப்சல், அஜித் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory