» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!

சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற இணைய வழி ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளியை ஆக.7ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, குளச்சல் (இ) தேங்காய்பட்டணம் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிற்றார் நீர்த்தேக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடும் பொருட்டு இணைய வழி ஏல அறிவிப்பானது (e-tender) சென்னை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அவர்களால் கடந்த 24.07.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 

சிற்றார் நீர்த்தேக்கத்தின் மீன்பாசி ஏலம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் 19494/F3/2024/13 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியை 07.08.2025 அன்று மாலை 5.00 மணிவரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் ([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும், அல்லது கீழ்குளம், முக்கட்டுவிளையில் அமைந்துள்ள தேங்காய்பட்டணம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ நிவர்த்தி செய்து கொள்ளலாம். 

எனவே, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ள சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு பெற விருப்பம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory