» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆணவக் கொலை: கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி ஆறுதல்!!

வியாழன் 31, ஜூலை 2025 11:24:09 AM (IST)

குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கனிமொழி எம்பி உறுதி அளித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்துள்ளார். அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்குத் தனது தாத்தாவுடன் சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சுர்ஜித், கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியில் உள்ள ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார் எனத் தெரிவித்தார்.

சுர்ஜித் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தாயாரும் கைது செய்யப்பட வேண்டும் என கவின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷ் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க கழக அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தேன் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory