» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

வியாழன் 31, ஜூலை 2025 12:16:57 PM (IST)

May be an image of 1 person and street

தூத்துக்குடி 57வது வார்டு பகுதியில் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது குறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 57வது வார்டு காமராஜ் நகரில் சமுதாயக் கூடத்தை ஒட்டியுள்ள பகுதி தெருவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. வீடுகள் நிறைந்த அந்த தெருவில் கடைசியில் இரண்டு பக்கம் வீடு இல்லாததால் சில மீட்டர்கள் இடைவெளி விட்டு சாலை அமைக்கும் பணியை நிறுத்தி விட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது, அங்கு வீடு வந்த பிறகு அதை மட்டும் போடுவதற்காக அப்போது வருவோம் என்று கூறி ஏளனமாக சிரித்துள்ளனர். 

இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள், இந்தப் பகுதி அத்திமரப்பட்டி ஊராட்சியாக இருந்தபோது என்ன இருந்ததோ அதுதான் இன்று வரை இருக்கிறது, ஆனால் 2008 ம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது இணைக்கப்பட்ட ஊராட்சிகள் பகுதிகள் மாநகராட்சிக்கு இணையான 100% வளர்ச்சிகள் உருவாக்கப்பட்ட பிறகே வரிகள் உயர்த்தப்படும் அதுவரை ஊராட்சி வரியே வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

ஆனால் அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டு, தூத்துக்குடி தெற்கு வடக்கு- கடற்கரை சாலை, அண்ணா நகர், பிரையண்ட் நகர்,சிதம்பரம் நகர், பழைய,புதிய பேருந்து நிலையப் பகுதி,மாதா கோவிலை சுற்றியுள்ள தெரு வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சாலை மற்றும் நடைபாதை வசதி போன்ற எந்தவித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், ஊராட்சி கால வளர்ச்சி பணிகளுடன் மட்டுமே இருக்கும் பகுதிகளுக்கு 100% வரிகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தூத்துக்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத நிலையில் இணைக்கப்பட்ட அத்திமரப்பட்டி முத்தையாபுரம் ஊராட்சி பகுதிகளுக்கும் இல்லாத பாதாள சாக்கடைக்கு வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில மீட்டர் சாலை அமைப்பதில் அளவு கணக்கீடு பார்த்தால் எப்படி? எனவே இது குறித்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலை மையப் பகுதியில் முத்தையாபுரம் முதல் துறைமுகம் செல்லும் 4 வழி சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 2008 ம் ஆண்டு வரை ஊராட்சியாக இருந்தபோது இருந்த போலீஸ் நிழற்குடை அதில் தினசரி பணி செய்த போக்குவரத்து காவலர், தற்போது 17 ஆண்டுகளாக இல்லை, பல ஆயிரம் வாகனங்கள் அந்த வழியில் தினசரி செல்கிறது, நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிர் இழந்து உள்ளனர், எனவே இது குறித்தும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory