» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரும் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதா? அமித்ஷாவுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:27:42 AM (IST)
தான் வகிக்கும் பெரும் பதவியின் பொறுப்பை எண்ணிப் பாராமல் மாற்றுக் கட்சி வேட்பாளரை மிகக் கடுமையான சொற்களால் தாக்கியிருக்கும் உள்துறை அமைச்சருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் நாடாளுமன்ற மரபுகளை நாம் முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறோம். அதன்படி மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் குறிப்பிடும்போது அவர்களின் பெயர்களையே கூறக் கூடாது. மாறாக, இந்தத் தொகுதியைச் சேர்ந்த உறுப்பினர் என்று மட்டுமே கூறவேண்டும். பெயரைக் குறிப்பிடுவது நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானதாகும்.
இந்திய அரசில் உள்துறை அமைச்சராகப் பெரும் பொறுப்பு வகிக்கும் அமித் சா அவர்கள், அண்மையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், தற்போது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி குறித்துக் குறிப்பிடும்போது, நக்சல் இயக்கத்தின் ஆதரவாளர், அதற்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியவர் என்னும் கடுமையான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.
தான் வகிக்கும் பெரும் பதவியின் பொறுப்பை எண்ணிப் பாராமல் மாற்றுக் கட்சி வேட்பாளரை மிகக் கடுமையான சொற்களால் தாக்கியிருக்கும் உள்துறை அமைச்சரின் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். உச்சநீதிமன்ற நீதிபதியையோ அவரது தீர்ப்பையோ விமர்சனம் செய்வது நீதிமன்ற அவமதிப்பாகும். மேலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் மாற்று அணியின் வேட்பாளராகப் போட்டியிடும் ஒருவர் மீது தக்க ஆதாரம் எதுவுமின்றி கடுமையான குற்றச்சாட்டை அள்ளிவீசுவது பொறுப்பற்ற போக்காகும். உள்துறை அமைச்சர் பதவியின் கண்ணியத்தைச் சீரழிப்பதாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
