» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:50:10 AM (IST)

புதூர் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் புவிராஜா தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் புதூரில் விளாத்திகுளம், புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளான் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.
இதில் கந்தசாமிபுரம், மணியக்காரன்பட்டி, மேல அருணாசலபுரம், துசைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக விவசாய கடன் பெற்றுள்ளனர். விவசாயிகளின் கடனை வங்கியில் நேரடியாக செலுத்தாமல் தங்களின் நிறுவனம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கூறி மாதம் தோறும் விவசாயிகளிடம் வசூல் செய்து உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல் நிறுவனத்தின் சிஇஓ புதூர் ஜெகதீஸ் மனைவி பவித்ரா மற்றும் நிர்வாகத்தினர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இதன் காரணமாக கடனை முறையாக செலுத்தாததால் விவசாயிகளுக்கு வங்கியின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் விவசாயத்திற்கான கடன்கள் நகைக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வங்கி மேற்கொள்ளும் சட்டரீதியாக நடவடிக்கைகளும் எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் வருகிறார்கள்.
இதுகுறித்து கம்பெனி நிர்வாகத்திடம் தொடர்ந்த முறையீட்டும் 3 ஆண்டுகளாக பணத்தை செலுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள். எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 13.08.2025க்குள் ரூ.20 லட்சம் வங்கியில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே விவசாயிகளிடம் வசூல் செய்த வங்கிக்கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் கோடிக்கணக்கில் மோசடி செய்த கம்பெனியின் சிஇஓ பவித்ரா மற்றும் உடந்தையாக இருந்த மணிக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகள் பணத்தை வங்கியில் திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
