» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:38:51 PM (IST)

நித்திரவிளை அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பொன்னுரிக்கி வீட்டை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி லீலாபாய் (77).இவர் நேற்று முன்தினம் மாலையில் களியக்காவிளை செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. பின்னர், களியக்காவிளை வந்ததும் பஸ்சில் இருந்து லீலாபாய் இறங்கினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நகை அபேஸ் செய்தது தெரியவந்தது. பின்னர், இதுபற்றி லீலாபாய் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory