» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியைகள் தேர்வு!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:37:36 AM (IST)
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் ஜனாதிபதியிடம் விருதுகளை பெற இருக்கின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது குறித்த அறிவிப்பை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி 45 ஆசிரியர்கள் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களின் பெயர் இடம் பெற்று உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியான பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியின் ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் ஆகிய 2 பேருக்கு இந்த தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்து இருக்கிறது.
இதுதொடர்பாக ஆசிரியை விஜயலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: நான் கடந்த 1998-ம் ஆண்டு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள முடீஸ் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியை தொடங்கினேன். தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புவியியல் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்.
எனது பணியை பாராட்டி, கடந்த 2020-ம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டதன் பலனாக தற்போது தேசிய நல்லாசிரியர் விருது எனக்கு கிடைத்துள்ளது. இது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விருதை நான் பணியாற்றி வருகிற பள்ளிக்கும், மாணவிகளுக்கும், பெற்றோருக்கும் சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மற்றொரு ஆசிரியையான ரேவதி பரமேஸ்வரன் கூறும்போது, 'தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். மன நிறைவை கொடுக்கிறது. 34 ஆண்டுகள் கணித ஆசிரியராகவும், 8 ஆண்டுகள் பள்ளி முதல்வராகவும் இருக்கிறேன். மாணவ-மாணவிகளுக்கு கணக்கு பாடத்தை எளிமையாக சொல்லித் தர முடியும் என்பதை குறித்து தொடர்ந்து சிந்தித்து வருகிறேன். இது தொடர்பான சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்கேற்று இருக்கிறேன். கணக்கு பாடம் கஷ்டம் என்று இருக்கிறது. அதை போக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். என்னுடைய உழைப்புக்கு இந்த விருது மூலம் ஊக்கம் கிடைத்திருக்கிறது' என்றார்.
இதுபோல புதுச்சேரியில் தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வி.ரெக்ஸ் என்கிற ராதாகிருஷ்ணன் தேர்வு பெற்றுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
