» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது விபத்து : புது மாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி!

புதன் 27, ஆகஸ்ட் 2025 5:25:10 PM (IST)

கள்ளக்குறிச்சியில் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்றபோது பைக் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடாமுண்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு வருகிற 4-ந்தேதி திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக தனது உறவினர்களுக்கு பத்திரிகை கொடுப்பதற்காக நாராயணன், தனது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் இருவரையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர். 

விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தவெக நிர்வாகி என கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பத்திரிகை கொடுக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory