» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு முதலிடம்: மத்திய பாஜக அரசே நெத்தியடி பதில்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:38:03 PM (IST)
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜக அரசே 'நெத்தியடி பதில்' தந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டின் வேலைவாய்ப்புகளில் மாநிலங்களின் பங்களிப்பில் தமிழ்நாடு 15 சதவீதம் பங்கைக் கொடுத்துள்ளது என்றும், குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்தரப்பிரதேசம் (8%) மற்றும் கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் மையமாக தமிழ்நாடு உள்ளது.... "திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும். மத்திய உள்துறை அமித்ஷா முதல் எடப்பாடி பழனிசாமி வரை திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் மத்திய பாஜக அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ...!.
சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
