» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:51:30 PM (IST)
தமிழகத்தில் 70 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் துணை ஆட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தோ்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 44 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 போ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 போ் தோ்வு எழுதினா்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். இதில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக தேர்வர்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் : 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:36:49 PM (IST)

அஜித் படத்தின் படத்தில் அனுமதியின்றி பாடல் வழக்கு தொடர்ந்த இளையராஜா!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:24:54 PM (IST)

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு - ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:08:04 PM (IST)

ரூ.237.46 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் 2.0 குடிநீர் திட்ட பணிகள் : ஆட்சியர் அழகுமீனா ஆய்வு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 3:42:39 PM (IST)

கல்லூரி வாழ்க்கை தான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 12:47:17 PM (IST)

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க 10 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: செங்கோட்டையன் பேட்டி!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:59:59 AM (IST)
