» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்தை பிரம்ம முகூர்த்தத்தில் நடத்த வேண்டும்- பக்தர்கள் வலியுறுத்தல்

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:38:31 PM (IST)

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்தை பிரம்ம முகூர்த்தத்தில் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம்,குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இத்திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் அபிஷேக மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். அறங்காவலர் குழு உறுப்பினர் மகாராஜன்முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்றார். திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு கொடி பட்டம் கோவிலுக்கு காலதாமதமாக வந்தது. எனவே பெரிய கோவில்களில் நடைபெறுவது போல் பிரம்ம முகூர்த்தத்தமான அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்ற பக்தர்களின் கோரிக்கை குறித்தும், கொடியேற்றத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதி, ஊர் மக்கள் நலன், காப்பு கயிறு சீராக வழங்குதல், கொடி பட்டம் ஊர் சுற்றி வருதல், கொடியேற்றம் நேரம் குறித்து பொதுமக்கள், பக்தர்கள், தசரா குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பக்தர்கள், தசரா குழுவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், பிரம்ம முகூர்த்தத்தில் தசரா திருவிழா கொடியேற்ற வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். குலசேகரன்பட்டினத்தில் ஒருநாள் முன்பாக கொடிபட்டம் ஊர்வலத்தை முதல்நாளில் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரிவாக ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவில் கோவில் கணக்கர் டிமிட்ரோ நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory