» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி: இளம்பெண் கைது!
புதன் 24, ஜூன் 2026 10:44:57 AM (IST)
கேரளாவில் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகும் வாலிபர்களைத் திருமணம் செய்வதாகக் கூறி, ரூ. 50 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணைப் பெரும்பாவூர் போலீசார் கைது செய்துள்ளனர்!
கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்குப் பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், அந்த வாலிபரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தனது வர்த்தகத்தில் பங்குதாரராகச் சேர்ப்பதாகவும் ஷம்லா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்த வாலிபர், கடந்த 3.9.2024 முதல் 20.11.2024 வரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 50 லட்சத்தை வங்கி கணக்கு மற்றும் ஜிபே மூலம் ஷம்லாவிடம் செலுத்தியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட ஷம்லா, வாலிபரைத் திருமணம் செய்யாமலும், வர்த்தகத்தில் சேர்க்காமலும் ஏமாற்றியுள்ளார். வாலிபர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது தராமல் காலம் கடத்தியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த வாலிபர் பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஷம்லாவைக் கைது செய்தனர்.
பல இடங்களில் மோசடி:
போலீசாரின் விசாரணையில், ஷம்லா இதே பாணியில் மலப்புரம், வயநாடு, கோதமங்கலம், ஆலுவா உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு வாலிபர்களிடம் நைசாகப் பேசி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. குறிப்பாகக் கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 20 லட்சமும், ஆலுவாவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 11 லட்சமும் ஏமாற்றி, அந்த பணத்தில் அவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


