» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4 ஆக உயர்வு - 11 பேர் கைது!
ஞாயிறு 26, ஜூலை 2026 8:57:56 PM (IST)
சிவகாசி அருகே சட்டவிரோதமாகச் இயங்கி வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் 11 பேரைக் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் தகரச் செட் அமைத்துச் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்பாராதவிதமாக அங்குத் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, செங்கமலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 11 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் தயாரிப்பு மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.411.51 கோடியாக உயர்வு: முதலாம் காலாண்டில் சாதனை!
திங்கள் 27, ஜூலை 2026 8:46:45 PM (IST)

கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 5:54:38 PM (IST)

ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 5:24:15 PM (IST)

சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 27, ஜூலை 2026 4:44:50 PM (IST)

சென்னை மேயர் பிரியாவுக்கு மர்ம நபர் தொல்லை: காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்!
திங்கள் 27, ஜூலை 2026 4:23:21 PM (IST)

பாளை சிறையில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
திங்கள் 27, ஜூலை 2026 3:41:27 PM (IST)


