» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு!

புதன் 18, டிசம்பர் 2024 11:53:28 AM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து, இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருந்தபோது, மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

காபாவில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அடிக்கடி மழை குறுக்கீடு இருந்தது. 2ஆவது நாள் ஆட்டம் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற நாள் ஆட்டங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஆட்டம் ரத்தானது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎலில் தொடர்ந்து விளையாடுவார்.

அஸ்வினுக்கு தற்போது 38 வயதாகிறது. மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 537 விக்கெட்களையும், 3503 ரன்களையும் எடுத்து, பெஸ்ட் ஆல்ரவுண்டராக திகழந்தார். 2014 முதல் 2019ஆம் ஆண்டுவரை, டெஸ்டில் தொடர்ந்து மேட்ச் வின்னராக அஸ்வின் இருந்த நிலையில், அடுத்து டெஸ்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு, அஸ்வின் மீண்டும் தேவைப்பட்டதால், மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பினார்.

அஸ்வின், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். இந்திய டெஸ்ட் அணியில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கும் நிலையில், அஸ்வினுக்கு மாற்றாக மூன்றாவது ஸ்பின்னராக அக்சர் படேலை அணிக்குள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory