» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: ரஷித் கான் உலக சாதனை

வியாழன் 6, பிப்ரவரி 2025 3:49:08 PM (IST)

டி20 கிரிக்கெட்டில்  633 விக்கெட்களை கைப்பற்றிய ரஷித் கான் உலக சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிபயர் 1) ஆட்டத்தில் எம்.ஜ. கேப்டவுன் அணி பார்ல் ராயல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இதில் கேப்டவுன் அணியின் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித் கான் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச, லீக், உள்ளூர் போட்டி உள்பட) அவரது விக்கெட் எண்ணிக்கை 633-ஆக உயர்ந்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார். இதற்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் வெய்ன் பிராவோ 631 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முந்தி ரஷித் கான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory