» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக சதங்கள் : ரச்சின் ரவீந்திரா சாதனை!

செவ்வாய் 25, பிப்ரவரி 2025 12:07:08 PM (IST)



சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷண்டோ 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்துஅணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். பிரேஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனையும் சேர்த்து நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் தொடர்களான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளில் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் வில்லியம்சன் மற்றும் நாதன் ஆஸ்ட்லே தலா 3 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory