திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (45 of 53)

 
வந்தாரை வாழ வைக்கும் வனபேச்சியம்மன்

 
லோயர் கேம் அலுவலகம் அருகில் ஒரு பைரவர் கோயில உள்ளது. இவர் எப்போதுமே வேட்டி வஸ்திரம் இல்லாமல் இருப்பார். இவருக்கு பக்தர்கள் ஏராளம். இந்த இடத்திற்கு வந்து அவர்கள் உளுந்த வடை மாலை சாத்தி சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலுக்கு நிரந்தர பூஜை என்ற எதுவும் இல்லாவிட்டாலும் கூட பக்தர்கள் போடும் உளுந்த வடை மாலைக்கு பஞ்சமே இல்லை.
 
"கொட்டுதளம" என்று பொதிகை மலையில் அழைக்கப்படும் இடமே தற்சமயம் "ஷலோயர் கேம்" என்று வழங்கப்படுகிறது. இங்கு தான் மின்சார வாரியத்துக்கு சொந்தமான வன பேச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை பொறுத்த வரை 1936-ம் ஆண்டு வரை மேலணைக்குள் தான் இருந்ததாம். அணை கட்டும் போது இக்கோவிலை தற்சமயம் உள்ள இடத்தில் நிறுவியுள்ளனர். மேலணையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சித்திரை மாதம் கடைசி செவ்வாய் அன்று கோவில் திருவிழா நடத்தவார்கள்.
 
பேச்சியம்மனுடன், இசக்கியம்மன் ஒன்றாக இருப்பது இந்த கோயிலில் தான். இந்தகோயிலில் பலா மரத்தடி பேச்சி, நீலகண்ட பேச்சி என்று அழைக்கப்படும் வனபேச்சியம்மன் பாம்பு வடிவில் அமர்ந்து இருக்கிறார். இந்த அமைப்பும் இக்கோவிலில் மட்டும் தான் இருக்கிறது. பாம்பு வடிவில் இருக்கும் மூலவர் இந்த கோயிலில் இருப்பது போல் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. என்கிறார் இந்த கோயில் அர்ச்சகர் பிரம்மநாயகம். இக்கோவில் அருகே பொதிகையடி முருகன் கோவில் உள்ளது.
 
இந்த முருகன் கோயிலை செல்லத்துரை என்ற கிறிஸ்தவர் அமைத்து உள்ளார். இந்த செயல் மதஒற்றுமைக்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு ஆகும். இக்கோவில் வலது புறம் ஒரு பெரிய பாம்பு புற்று உள்ளது. 10 அடி உயரமுள்ள இந்த நாகர் புற்றில் பால், மஞ்சள் பொடி, முட்டை, பூ வளையல், கண்ணாடி, முறம், தரமணி போன்ற பொருள்களை வைத்து பெண்கள் வழிபட்டு வருகின்றனர்.
 
 
இந்த இடத்தில் இவர்கள் வைக்கும் பாலை குடிக்க பாம்பு வந்து செல்கிறது என்பது இவர்கள் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டி போட்டும், நீதி மன்ற வழக்கு வெற்றி பெற இங்கு வந்து வணங்கியும் செல்கின்றனர். இங்கு வாழும் பாம்பு, பால் மற்றும் முட்டையை குடித்து போவதை கண்ணால் பார்ப்பதாக இப்பகுதியில் வாழும் பூசாரி பிரம்மநாயகம் கூறினார்.
 
கூடுபாறை
 
பாண்டியன் கோட்டை அருகில் தான் கூடுபாறை உள் ளது. சேர்வலாறு அருகே உள்ள குடமாடீ கூடுபாறை சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திரம் அன்று மிகவும் விசேஷமாக இருக்கும். தற்சமயம் அங்கு செல்லும் பாதை மோசமாகி விட்டது. இந்த காரணத்தால் பக்தர்கள் மிக அதிகமாக அந்தக்கோயிலுக்கு செல்வது கிடையாது.
 
காசி
 
காசி என்றாலே மிகவும் விசேஷமானது. காசியில் கெவுளி(பல்லி) அடிக்காதாம். பூ மணக்காதாம். மாடு முட்டாதாம். பிணம் வாடை வீசாதாம். கருடன் பறக்காதாம். இந்த புண்ணிய தல மான காசியில் பாவத்தை பலர் போக்க அங்கு சென்றாலும் கூட காசியில் செய்த பாவத்தை போக்க வேண்டுமென்றால் பாபநாசம் தான் வர வேண்டும்.
 
சுடலைமாடன் என்றாலே அவர் சிவன் அம்சம். இருளப்பன் சாமி பிரமனின் அம்சம். பேச்சியம்மன் சரஸ்வதி அம்சம் என்று கூறும பிரம்மநாயகம் மேலும் இப்பகுதி கோவில்கள் குறித்து கூறினார். அவர் கூறியதாவது : வனபேச்சியம்மன் என்று கூறும் போதே வனத்தில் உள்ள கொடிய விலங்குகளிடம் இருந்து மனிதர்களை காக்கும் அம்மன் வன பேச்சியம்மன் என்று கூறுகிறோம்.
 
இந்த பேச்சியம்மன் கோவிலைப் பொறுத்தவரை லோயர் கேம்பில் மின்சாரம் தயாரிக்க தேக்கப்பட்டு இருக்கும் கீழணையின் அருகில் அமர்ந்து உள்ளது. இந்த இடம் தான் தாமிரபரணியில் மின்சாரம் தயாரிப்புக்கு இதயமாக கருதப்படும் இடம். இந்த இடத்தில் வரும் போதே நம்மை அறியாமலேயே பக்தி மார்க்கம் வனபேச்சியம்மன் கோவிலை பார்த்தவுடனேயே வந்து விடும்.


Favorite tags



Tirunelveli Business Directory