» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தரமற்ற சாலைப் பணிகள்: பொதுமக்கள் போராட்டம் ; தூத்துக்குடியில் பரபரப்பு!!
திங்கள் 1, ஏப்ரல் 2024 10:26:08 AM (IST)

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் சாலைப் பணிகள் நடப்பதாக கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ராமசாமிபுரம் முதல் தெரு, பக்கிள்புரம் பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரமற்ற வகையில் சாலைப் பணிகள் நடப்பதாக கூறி சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், "ராமசாமிபுரம் முதல் தெரு, பக்கிள்புரம் பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது. இதனை முறையாக அமைக்கப்படவில்லை. மேலும் பல வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை.
இப்பணிகளை நிறைவேற்றாமல் அவசர கதியில் சாலைகள் அமைக்கப்படுகிறது. சாலைப் பணிகள் தரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், கழிவு நீர் கால்வாய், பாதாள சாக்கடை இணைப்பு வழங்கிய பின் தரமான முறையில் சாலைகள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
சிதம்பர நகர் ஏரியாApr 1, 2024 - 12:50:09 PM | Posted IP 162.1*****
சிதம்பரநாகரில் அரைகுறை சாலை அப்படியே மண் , மணல் கொட்டி போய்ட்டாங்க , மாநகராட்சி எல்லாம் அறை குறை பயலுக . மேயர் ஜெகன் அவர் ஓட்டு கேக்க ஊர் சுற்ற போயிட்டாரு. வேஸ்ட்
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)

புவனேந்திரன்Apr 4, 2024 - 06:54:52 AM | Posted IP 162.1*****