» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆக்ஸ்போர்டு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
திங்கள் 15, ஜூலை 2024 3:38:55 PM (IST)
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காமராஜர் வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்கின் பால் சுசி, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.திருமலை பெருந்தலைவர் காமராஜரின் தனிச்சிறப்புகள் பற்றியும், அவர் கல்விக்கு ஆற்றிய பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். காமராஜரின் வேடமணிந்த மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கர்மவீரர் காமராஜர், பெருந்தலைவர் காமராஜர், உலகம் போற்றும் உத்தமர் காமராஜர், கிங் மேக்கர் காமராஜர், ஏழை பங்காளன் காமராஜர், கல்வி கண் திறந்த காமராஜர் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பேசினர். மேலும் காமராஜரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றி பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை பேசினார்.
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.