» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: 110 அடியை தொட்ட பாபநாசம் அணை!

செவ்வாய் 16, ஜூலை 2024 11:23:57 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்ம் 6 அடி உயர்ந்து 110 அடியை தொட்டது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111 அடியை தொட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையினால் திருநெல்வேலி மாவட்டத்தின் அணைகள் அனைத்திற்கும் வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை பகுதியில் 44 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் சேர்வலாறு அணைப்பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பொழிவும் மணிமுத்தாறு அணை பகுதியில் 8.8 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவானது குண்டாறு அணை பகுதியில் 66.6 மில்லி மீட்டர் மழை பொழிவும் பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.10 அடியை நெருங்குகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 129.20 அடியாக உள்ளது. 

குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக பாபநாசம் அணையில் இருந்து 956 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்திலேயே பாபநாசம் அணையின் நீர்மட்டம் 110 அடியை தாண்டி உள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தின் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கார் பருவ சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory