» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: ஆக.2 முதல் 6 வரை பக்தர்களுக்கு அனுமதி!

திங்கள் 22, ஜூலை 2024 12:12:55 PM (IST)

சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை அனைத்து விதிகளையும் கடைபிடித்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பக்தர்கள் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகள் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு அரசுத்துறைகளால் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்முறையில் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் முந்தைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு பொதுமக்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 6.00 மணி முதல் அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 06:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 04.00 மணி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தனியார் வாகனங்கள் எதுவும் பாபநாசம் சோதனைச்சாவடியில் இருந்து அனுமதிக்கப்படாது. இக்காலத்தில் திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பொது போக்குவரத்து மற்றும் அரசு பேருந்துகள் மூலமாக மட்டுமே திருக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். மீண்டும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 6.00 மணி முதல் மாலை 4,00 மணி வரை பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய நாட்கள் முழுவதும் திருவிழா முன்னேற்பாடு பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் காரணத்தினால் அரசு பேருந்து, தனியார் வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனங்களும் பாபநாசம் சோதனை சாவடியில் அகஸ்தியர் அருவி அல்லது காரையாறு பகுதிக்கு அனுமதிக்கப்படமாட்டாது. ஆகஸ்ட 07 மற்றும் 08 - ஆம் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் திருக்கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட 09 - ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி பக்தர்கள், பொதுமக்கள் திருக்கோவிலுக்கும் அகஸ்தியர் அருவிக்கும் சென்று வரலாம். ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை மணிமுத்தாறு, அகத்தியர் அருவிகளுக்கு செல்லவும், மாஞ்சோலைக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை. பாபநாசம் சோதனை சாவடிக்கு மேல் டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்கள் எடுத்து செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களில் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற இடங்களில் குடில்கள் அமைக்கலாம். தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் குடில்கள் அமைக்கவோ, தங்கவோ அனுமதி இல்லை. கடந்த ஆண்டு ஒரு சில தனிநபர்கள் இடங்களை ஆக்கிரமித்து குடில்கள் அமைத்து கொண்டு பக்தர்களிடம் அதிக தொகை கேட்டு அடாவடி செயல்களில் ஈடுபட்டதாக புகார் வரப்பெற்றது. 

இவ்வாறு ஆக்கிரமித்து குடில் அமைத்து அதிக கட்டணம் வசூல் செய்வதாக பக்தர்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றால் வனத்துறை மற்றும் காவல்துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு முறைகேடாக அமைக்கப்படும் குடில்களும் அகற்றப்படும். எனவே, இது போன்ற நம்பகத்தன்மையற்ற தனி நபர்களிடம் குடில் அமைக்க பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் குடில்களுக்கு யாரேனும் முறைகேடாக கட்டணம் வசூலித்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்ணெண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மது, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். 

மேலும் வனப்பகுதிகளில் அசுத்தம் செய்யாமல் குப்பைகளை ஆங்காங்கே வைக்கப்படும் குப்பை தொட்டியில் போடுமாறும், அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்திடவும் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கோவில் தவிர்த்த வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை. திடீர் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் சென்று வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளின் அறிவுரையை தவறாமல் பின்பற்றி திருவிழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் அனைவரையும் திருவிழா கண்காணிப்பு அலுவலர் மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

SaminathanJul 24, 2024 - 05:24:32 PM | Posted IP 172.7*****

சங்கிலி பூதத்தார் அருளால் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

SaminathanJul 24, 2024 - 05:24:32 PM | Posted IP 172.7*****

சங்கிலி பூதத்தார் அருளால் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

SaminathanJul 24, 2024 - 05:24:31 PM | Posted IP 172.7*****

சங்கிலி பூதத்தார் அருளால் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory