» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 149-வது பிறந்த நாள் விழா : ஆட்சியர் மரியாதை!

சனி 27, ஜூலை 2024 3:23:37 PM (IST)



கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 149-வது பிறந்த நாளையொட்டி  அன்னாரது சிலைக்கு குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 149-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது முழு திருவுருவ சிலைக்கு இன்று (27.07.2024) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலெட்சுமி இணையருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் நாள் மகனாக பிறந்தார் கவிமணி தேசிய விநாயம் பிள்ளை. 

கவிமணி சிறந்த தமிழறிஞர், எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். கவிமணி மலரும் மாலை, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்கள். நாகர்கோவிலில் உள்ள கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். ஆங்கில மொழியில் எட்வின் ஆர்னால்டு எழுதிய ”லைட் ஆ/ப் ஆசியா” என்ற நூலை தமிழில் ”ஆசிய ஜோதி” என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார்.

குழந்தைகள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் அத்தகைய குழந்தைகளுக்காக ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கு துள்ளிக் குதிக்குது கன்றுகுட்டி” என்று ரசித்து இசைக்கும் படியான பாடலை இயற்றியவர். மேலும் பெண்கள் ஒரு போதும் யாருக்கும் அடிமையாக இருக்கக்கூடாது, பெண்ணடிமைத்தன்மையை முற்றிலும் ஒழிய வேண்டும் என்று ”மங்கையாராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்று பெண்மையை பார் போற்ற செய்தவர் கவிமணி ஆவார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, அவ்கள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் மூர்த்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வ லெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷியா, சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் கமலேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

39வது தேசிய கண் தானே இரு வார நிறைவு விழா

வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:57:40 PM (IST)

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

வியாழன் 5, செப்டம்பர் 2024 3:44:43 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory