» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 20ஆம் தேதி மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 8:37:20 PM (IST)
ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் வரும் 20ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், மாவட்ட நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் அருகில் உள்ள கடை எண்கள். 10836, 10641, 10736, 10618 மற்றும் 10732 ஆகிய அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் ஆகியவை திருநெல்வேலி காவல் உதவி ஆணையாளர் பரிந்துரையின் அடிப்படையில் 20.08.2024 அன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.