» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி திருக்கோவில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு திருத் தேரோட்டம்!

திங்கள் 13, ஜனவரி 2025 11:13:01 AM (IST)



வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாதர் சுவாமி திருக்கோவில் திருத் தேரோட்டம் 19 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடந்தது. 

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம் வீரவநல்லூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீமரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாதர் சுவாமி திருக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (12.01.2025) நடைபெற்ற திருத் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் அர்பித் ஜெயின் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வீரவநல்லூர் அருள்தரும் ஸ்ரீமரகதாம்பிகை சமேத அருள்மிகு பூமிநாதர் சுவாமி திருக்கோவில் மிகவும் பழமையான சிவாலயம் ஆகும். இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் திருவிழாவில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளி திருவீதி உலாவும் நடைபெருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் பெரிய தேரானது கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட விபத்தில் சேதமடைந்தது. அதனை தொடர்ந்து தேர் சீரமைக்கப்பட்ட போதும், அந்த தேரை வடம் பிடித்து இலுத்து செல்ல தகுந்த சாலை வசதி இல்லாததால் தேர் ஒடாமல் இருந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களிடம் இதுகுறித்து கொண்டு சென்றதன் காரணமாக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது.

கோவிலை சுற்றி தேர் செல்லும் சாலை சுமார் 700 மீட்டர் நீளமுள்ள சாலையின் இரு புறமும் வாறுகால் அமைத்தும், இரண்டு பாலங்கள் கட்டியும், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, தரமான சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வட்டாட்சியர் வின்சென்ட், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் வசந்த சந்திரா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory