» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குறுவட்ட இறகுப் பந்து போட்டி: ஆக்ஸ்போர்டு பள்ளி முதலிடம்!
செவ்வாய் 20, ஆகஸ்ட் 2024 5:01:42 PM (IST)
இலஞ்சியில் நடைபெற்ற தென்காசி குறுவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.
தென்காசி குறுவட்ட அளவிலான இறகுப் பந்து விளையாட்டுப் போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் மாணவிகளுக்கான 17 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரியானா மெர்வின் முதலிடமும், இரண்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் ரியானா மெர்வின், சவுமியா ஆகியேர் முதலிடமும் பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.