» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை - போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 21, ஆகஸ்ட் 2024 8:08:04 AM (IST)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்காசி அருகே உள்ள கீழவாலிபன் பொத்தை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கார்த்திக் (24). கொத்தனாரான இவர் கடந்த 2020-ம் ஆண்டு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர், தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் (பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக்கிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.