» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு : திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல தடை

புதன் 21, ஆகஸ்ட் 2024 5:37:10 PM (IST)



நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதியில் திருமலை நம்பி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்நிலையில் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருக்குறுங்குடி வனத் துறையினர் அறிவித்துள்ளனர். இதுபோல நம்பியாற்றில் குளிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory