» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மத போதகர் பரிதாப சாவு
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:46:52 AM (IST)
தென்காசி அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் கிறிஸ்தவ மதபோதகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற சாமுவேல் (58). கிறிஸ்தவ மத போதகரான இவர் நேற்று காலையில் லெவிஞ்சிபுரத்தில் இருந்து தென்காசிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுசென்றார். தென்காசி அருகே திரவியநகர் பகுதியில் சென்றபோது, எதிரே தென்காசியில் இருந்து அம்பை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன்பக்க அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் சாமுவேல் சிக்கினார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உடனடியாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பஸ்சின் அடிப்பகுதியில் சிக்கி இறந்த சாமுவேல் உடலை மீட்டனர். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான சொக்கம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.