» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு கல்விக் கடன் முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 11:45:47 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கல்விக் கடன் முகாம் 28.08.2024, 29.08.2024, 03.09.2024, 04.09.2024, 05.09.2024, 11.09.2024 மற்றும் 12.09.2024 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமானது, வள்ளியூர் வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 28.08.2024 அன்று வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், ராதாபுரம் வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 29.08.2024 அன்று இராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும்,
சேரன்மகாதேவி, பாப்பாக்குடி வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 03.09.2024 அன்று சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், அம்பாசமுத்திரம் வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 04.09.2024 அன்று அம்பாசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும்,
மானூர் வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 05.09.2024 அன்று மானூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், களக்காடு வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 10.09.2024 அன்று களக்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், நாங்குநேரி வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 11.09.2024 அன்று நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும்,
பாளைங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு 12.09.2024 அன்று வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறும் சிறப்பு கல்விக்கடன் முகாமில் மாவட்டத்திலுள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து கலை, பொறியியல், மருத்துவ, செவிலியர், தொழில்கல்வி, பாலிடெக்னிக் சட்டக்கல்லூரி படிப்புக்கான கல்விக்கடன் எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரூ.4 இலட்சம் வரைCIBIL Score அவசியம் இல்லை. ரூ.7.50 இலட்சம் வரை பிணையம் தேவையில்லை. கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர் அனைவரும் வட்டி மானியம் பெற தகுதியுடையவர்கள் மட்டும் www.jansamarth.in என்ற இணையதளத்திலும், மற்றவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்திலும் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாத மாணவ, மாணவியர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பான் கார்டு நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், பத்து பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விபரங்களுக்கான பட்டியலுடன் முகாம் நடைபெறும் இடத்திற்கு பெற்றோருடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று, தகுதியான மாணவ, மாணவியர்களுக்கு கல்விக் கடன் வழங்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு 0462-2986989 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.