» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழநியில் முருகன் மாநாடு என்ற போர்வையில் செலவு செய்கிறார்கள். : எச்.ராஜா குற்றச்சாட்டு

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 5:14:34 PM (IST)

"இந்து விரோதியான தி.மு.க., பழநியில் யாரை ஏமாற்ற முருகன் மாநாடு நடத்தியது என தெரியவில்லை" என்று பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார்.

திருநெல்வேலியில் அவர் கூறியதாவது: தி.மு.க., இந்து மதத்திற்கு விரோதி. ஹிந்துக்களின் பல்வேறு பிரச்னைகளில் தலையிடுகின்றனர். ஹிந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாயை எடுத்து பழநியில் முருகன் மாநாடு என்ற போர்வையில் செலவு செய்கிறார்கள். 

யாரை ஏமாற்றுவதற்காக மாநாடு என்பது தெரியவில்லை. அது ஆன்மிக மாநாடு இல்லை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை அதிகமாக வழங்கி வருகிறது. உலகத்திலேயே இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory