» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 11:17:11 AM (IST)

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மைசூரு-செங்கோட்டை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06241) வருகிற 4 மற்றும் 7-ஆம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டை-மைசூரு சிறப்பு ரயில் (06242) வருகிற 5 மற்றும் 8-ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.20 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரயில்கள் இரு மார்க்கமாகவும், மண்டியா, மத்தூர், ராமநகர், கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory