» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 12:41:58 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதியுதவிடன் செயல்படும் திட்டமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 4 வட்டாரங்களைச் சார்ந்த 102 ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
இவ்வட்டாரங்களிலுள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மதி சிறகுகள் தொழில் மையம் (MSTM) அமைக்கப்படவுள்ளது. மேற்கண்ட மையத்தில் நிரப்பப்படவுள்ள தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (Enterprise Development Officer) ஒப்பந்த பணியிடங்களுக்கு ஏதேனும் முதுகலை பட்டம் முடித்த மற்றும் கணினி திறன் பெற்றுள்ள, 24 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஊரகத் தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.08.2024 முதல் 02.09.2024 ஆம் தேதி பிற்பகல் 5.00 மணிக்குள் மாவட்ட நிர்வாகத்தின் இணையதளம் https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ, மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தேவி மருத்துவமனை வளாகம், 2-வது தளம், ழே.1 வசந்த் நகர், மாவட்ட அறிவியல் மையம், பின்புறம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.